மேலும் செய்திகள்
மழைநீர் கால்வாய் சேதம் சிறுமாங்காடில் அபாயம்
12-Feb-2025
சென்னை:சென்னையில் வளிமண்டல சுழற்சி காரணமாக, நேற்று காலை முதல், விட்டுவிட்டு மழை பெய்தது.இதன் காரணமாக பிரதான சாலைகள் மட்டுமின்றி தாழ்வான பகுதிகள், பள்ளிகள், போக்குவரத்து பணிமனைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மழைநீரை, மோட்டார் அமைத்து, மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர்.குறிப்பாக, ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கவுடியா மடம் சாலை, பட்டூல்லாஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வேறு வழியின்றி ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க, பல கோடி ரூபாய் செலவில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், ஒவ்வொரு மழைக்கும், சாலையில் மழைநீர், குளம்போல் தேங்கி நிற்கிறது.இதற்கு காரணம் முறையாக மழைநீர் வடிகால் துார்வாரப்படாதது மட்டுமின்றி, அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்படாததும் தான்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
12-Feb-2025