உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீண்டும் அதிகரிக்கும் பேனர்கள் அரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

மீண்டும் அதிகரிக்கும் பேனர்கள் அரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

அண்ணா நகர்,:சாலையோரம், கட்டடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.அதனால், சென்னையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து, மாநகராட்சி கணக்கெடுத்து வருகிறது. எனினும், புதிது புதிதாக விளம்பர பேனர்கள் முளைத்து வருவது தொடர்கிறது.குறிப்பாக, அண்ணா நகர், அரும்பாக்கம் பகுதியில் சமீப காலமாக, விளம்பர பேனர்கள் வைப்பது, அதிகரித்து வருகிறது. நம் நாளிதழில் செய்தி வெளியாகும்போது, பேனர்கள் அகற்றப்படுகின்றன. மற்ற நேரத்தில், மீண்டும் வைக்கப்பட்டு வருகின்றன.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னையில் மற்ற இடங்களைவிட, அண்ணா நகர் பகுதியில் தான் உணவு விடுதிகள், தனியார் வணிக வளாகம், திரையரங்கங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இங்கு விளம்பரத்திற்கு குறைச்சலே இல்லை; எங்கு பார்த்தலும் அடுக்கடுக்காக விளம்பர பேனர்கள் முளைத்து உள்ளன.குறிப்பாக, அண்ணா வளைவு, அரும்பாக்கம்பாஞ்சாலி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், ஏராளமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.இதனால், அவ்வழியாக செல்வோரின் கவனம் திசை திரும்பி, விபத்தில் சிக்கும் நிலை நிலவுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ