உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையில் மாமூல் ரவுடிக்கு காப்பு

கடையில் மாமூல் ரவுடிக்கு காப்பு

அரும்பாக்கம், மளிகை கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லாப்பெட்டியில் இருந்த, 2,000 ரூபாயை பறித்துச் சென்ற ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.அரும்பாக்கம், திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நைனா முகமது, 38. இவர், அதே பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த நபர் ஒருவர், தான் ரவுடி எனக் கூறி மாமூல் கேட்டுள்ளார்.பணம் கொடுக்க மறுத்ததால், கடையில் இருந்த பாட்டில்களை உடைத்து, மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதையடுத்து, கல்லாப்பெட்டியில் இருந்த, 2,000 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பினார்.சம்பவம் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், அதே பகுதியில் இருந்த அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பதும், ரவுடி என்பதும் தெரிந்தது.இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ