உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்டல டேபிள் டென்னிஸ் எம்.ஓ.பி., வைஷ்ணவ் முதலிடம்

மண்டல டேபிள் டென்னிஸ் எம்.ஓ.பி., வைஷ்ணவ் முதலிடம்

சென்னை:சென்னை பல்கலைக்கு உட்பட கல்லுாரிகளை 'ஏ' மற்றும் 'பி' என, இரு மண்டலங்களாக பிரித்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், வெற்றி பெறும் அணிகளுக்கு, மண்டலங்களுக்கு இடையிலான ஆட்டம் நடத்தப்படுகிறது.அதன்படி, டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி சார்பில், மண்டலங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி, அரும்பாக்கத்தில் நேற்று நடந்தது.எம்.ஓ.பி., வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரிஸ், 'பி' மற்றும் 'ஏ' மண்டல இணைப்பு அணிகள், 'லீக்' முறையில் மோதின.அனைத்து போட்டிகள் முடிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணியினர், மூன்று போட்டிகளில் வென்று, 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தனர்.தொடர்ந்து, 'பி' மண்டலஇணைப்பு அணி, 5 புள்ளிகளில் இரண்டாம் இடத்தை கைப்பற்றினர்.ஸ்டெல்லா மேரிஸ் நான்கு புள்ளிகளும், 'ஏ' மண்டல இணைப்பு அணி மூன்று புள்ளிகளுடன், அடுத்தடுத்த இடங்களை வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி