உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அவசர சேவை பட்டன் அரசு பஸ்களில் பழுது

அவசர சேவை பட்டன் அரசு பஸ்களில் பழுது

சென்னை,சென்னையில் இயங்கி வரும் அரசு மாநகரப் பேருந்துகளில் அமைக்கப்பட்டிருந்த அவசர சேவை அழைப்புக்கான பட்டன், பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், தினமும், 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இவற்றில் 1,559 சாதாரண கட்டண பேருந்துகள், 1,674 விரைவு மற்றும் சொகுசு பேருந்து, 48 'ஏசி' பேருந்து, 207 சிற்றுந்துகளாக இயக்கப்படுகின்றன.அவற்றில் பயணியரின் பாதுகாப்பு கருதியும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு எச்சரிக்கும் விதமாகவும் ஒவ்வொரு பேருந்துகளிலும், 3-5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.அதேபோல், மகளிர் பாதுகாப்புக்காகவும், அவசர உதவிக்காகவும், நடத்துனர் இருக்கைக்கு மேலே, அவசர போலீஸ் அழைப்புக்காக சிவப்பு பட்டன் அமைக்கப்பட்டது.குரோம்பேட்டை பணிமனை தடம் எண் ஜே 1046 பேருந்தில் அவசர காலத்தேவைக்கு பயன்படுத்த முயன்ற போது, சிவப்பு பட்டன் பழுதடைந்து இருந்தது. பெரும்பாலான பேருந்துகளில் இதே நிலை காணப்படுவதாக பயணியர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை