உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெற்றோரை தவறவிட்ட சிறுமி மீட்பு

பெற்றோரை தவறவிட்ட சிறுமி மீட்பு

பூந்தமல்லி, பூந்தமல்லி, கரையான்சாவடி வாணியர் தெருவில், 16 வயது வடமாநில சிறுமி, நீண்ட நேரமாக நின்றுள்ளார். அங்கிருந்தோர், அச்சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.பீஹாரில் இருந்து உறவினர்களுடன் 'டைல்ஸ்' ஒட்டும் வேலைக்கு வந்ததாகவும், எதிர்பாராத விதமாக உறவினர்களை தவறவிட்டு, வழி தெரியாமல் நிற்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த பெண் ஒருவர், இதுகுறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறியுள்ளார்.பூந்தமல்லி போலீசார் அந்த சிறுமியை மீட்டு, குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை