உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடுக்குமாடியில் சாய்ந்த மரம் குடியிருப்புவாசிகள் அச்சம்

அடுக்குமாடியில் சாய்ந்த மரம் குடியிருப்புவாசிகள் அச்சம்

அரும்பாக்கம்,:அடுக்குமாடி குடியிருப்பின் மீது, ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள ராட்சத மரத்தை அகற்ற வேண்டும் என, கோரிக்கைவலுத்துள்ளது.அண்ணா நகர் மண்டலம், 106வது வார்டில், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலை உள்ளது. இந்த பிரதான சாலையில், பாண்டியன் தெரு மற்றும் சோழன் தெருவின் நடுவிலுள்ள பகுதியில், பழமையான ராட்சத மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் ஆபத்தான நிலையில், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது சாய்ந்துள்ளது. இதனால், எப்போதும் இப்பகுதியில் விபத்து அபாயம்நிலவுகிறது.பிரதான சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது, மரம் சாய்ந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்வு ஏற்படுகிறது.இதனால், அந்த அடுக்குமாடியில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மழைக்கு முன் அபாய நிலையிலுள்ள மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.இதுகுறித்து குடியிருப்பில் வசிக்கும் மூத்த குடிமக்கள் கூறியதாவது:அடுக்குமாடியின் மீது, இந்த ராட்சத மரம் சாய்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன், கனரக வாகனங்கள் செல்லும் போது, அந்த குடியிருப்பில் அதிர்வு ஏற்படுவதால், பகலும் இரவிலும் அச்சத்திலேயே குடியிருப்பில் வசிக்கிறோம். பருவ மழை துவங்கினால், நிச்சயம் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. மரத்தை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !