மேலும் செய்திகள்
7 சவரன் நகைகள் கொள்ளை; போலீஸ் விசாரணை
03-Aug-2024
வளசரவாக்கம், காரம்பாக்கம், தர்மராஜா நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 50. இவருடன், மகள் சந்தானலட்சுமி, 28, மருமகன் சிவமுருகன், 30, ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் மூவரும் உறங்க சென்றனர்.நேற்று அதிகாலை, மருமகன் சிவமுருகன் அறையிலிருந்து வெளியே வந்த போது, சாந்தி கை, கால்கள் கட்டப்பட்டு, மயக்க நிலையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிவமுருகன், உடனே அவரை மீட்டு பூந்தமல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.இது குறித்த தகவலின்படி, வளசரவாக்கம் போலீசார் வந்து சாந்தியிடம் விசாரித்தனர். அப்போது, மர்ம நபர்கள் அதிகாலையில் வீட்டில் புகுந்து, கட்டிப்போட்டு மயக்க 'ஸ்பிரே' அடித்து, கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகை, பீரோவிலிருந்த, 15 சவரன் என, 25 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக கூறியுள்ளார்.சம்பவ நடந்த வீட்டில் போலீசார் ஆய்வு செய்த போது, கொள்ளையர்கள் வந்து சென்றது போல எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, யாரும் வந்து போனதாக பதிவாகவில்லை.ஆனால் வீட்டில், நகை அடகு வைத்த ரசீதுகள் மட்டும், ஆங்காங்கே உள்ளன.எனவே, உண்மையில் நகை கொள்ளை போனதா, பொய் புகார் அளித்துள்ளார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Aug-2024