உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.48 லட்சம் மோசடி ராயப்பேட்டை நபர் கைது

ரூ.48 லட்சம் மோசடி ராயப்பேட்டை நபர் கைது

பாண்டிபஜார், தி.நகர், தங்கவேல் தெருவைச் சேர்ந்த வித்யா, 56. இவருக்கு அறிமுகமான, தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஆலோசகர் அன்பரசு, அவரது மனைவி ஜோதிலட்சுமி, மகன் கிரீஷ் ஆகியோர், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, ஆசைகாட்டி உள்ளனர்.அவர்களின் வார்த்தைகளை நம்பிய வித்யா, கடந்த 2022ம் ஆண்டு முதல் பல தவணைகளாக, 48.50 லட்சம் ரூபாய் அன்பரசுவிடம் கொடுத்துள்ளார்.ஆனால், அன்பரசு குடும்பத்தினர் கூறியபடி லாபத்தை தராமலும், கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி தலைமறைவாகினர். இது குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரித்தனர்.இதில், ராயப்பேட்டை, உசேன் தெருவைச் சேர்ந்த அன்பரசு, 57, என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே, சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒரு மோசடி வழக்கு உள்ளது தெரியவந்தது. மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ