| ADDED : ஜூன் 24, 2024 02:00 AM
அரும்பாக்கம்,:வெவ்வேறு இடங்களில் இரு நபர்களிடம், நுாதன முறையில்,'ஆன்லைன்' வாயிலாக, 1.13 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி,'ஏ பிளாக்' பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 42; தனியார் நிறுவன ஊழியர். கடந்த இரு நாட்களுக்கு முன் இவரது மொபைல் போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.அதில் அவரது வங்கியின் 'கே.ஒய்.சி.,' புதுப்பிக்க வேண்டுமென தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதில் உள்ள 'லிங்கை கிளிக்' செய்து தகவல்களை புதுப்பித்த போது, அவரது வங்கி கணக்கிலிருந்து 85,000 ரூபாய் திருடியது தெரிந்தது. இது குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.இதேபோல் கடந்த 16ம் தேதி, சென்னை எம்.எம்.டி., காலனியைச் சேர்ந்த கீர்த்திகா, 26, என்பவரிடம், 'இன்ஸ்டாகிராம் லிங்க்' வாயிலாக, 28,000 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடினர். இவ்விரு சம்பவங்களிலும் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.