உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூட்டை உடைத்து ரூ.16,000 ஆட்டை

பூட்டை உடைத்து ரூ.16,000 ஆட்டை

மதுரவாயல், மதுரவாயல், ஆலப்பாக்கம், கங்கையம்மன் நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் ராமு கண்ணன், 35. இவர் அதே பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் வியாபாரம் முடிந்து, கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கடைக்குள் சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் கடையில் இருந்த 16,000 ரூபாயை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ