உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணலியில் ரூ.2.10 கோடி திட்டபணிகள் துவக்கம்

மணலியில் ரூ.2.10 கோடி திட்டபணிகள் துவக்கம்

மணலி, மணலியில், 2.10 கோடி ரூபாய் செலவிலான திட்டப் பணிகளை, தி.மு.க., --- எம்.எல்.ஏ., சங்கர் துவக்கி வைத்தார்.மணலி மண்டலம், பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ஒரு கோடி ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள்,அம்பேத்கர் தெருவில், 45 லட்ச ரூபாய் செலவில், பல்நோக்கு கட்டடம், நெடுஞ்செழியன் தெருவில், 45 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு கட்டடம் கட்ட, நேற்று பூமி பூஜை போடப்பட்டது.இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி சங்கர் அடிக்கல் நாட்டினார். மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், செயற்பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளும் திறக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜேஷ்சேகர், ஸ்ரீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை