உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் சவரனுக்கு ரூ.1,500 தள்ளுபடி

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் சவரனுக்கு ரூ.1,500 தள்ளுபடி

சென்னை, அக் ஷய திருதியை முன்னிட்டு போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில், அனைத்து தங்க நகைகளுக்கும், ஒரு சவரனுக்கு 1,500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் சில்லரை தங்க நகை விற்பனை நிறுவனமான, போத்தீஸ் ஸ்வர்ண மஹால், 'மீனாட்சி திருக்கல்யாணம் கலெக் ஷன்' என்ற புதிய 'ஆன்டிக் பிரைடல்' தங்க நகைகளை அறிமுகம் செய்துள்ளது.சுந்தரேஸ்வர் - மீனாட்சி தெய்வீக திருமணத்தை பிரதிபலிக்கும் தங்க நகைகளை, அக் ஷய திருதியையின் தங்கச் செழிப்பாகவும், மதிப்பான முதலீடாகவும் வாங்கி பாதுகாக்கலாம்.போத்தீஸ் ஸ்வர்ண மஹால் துாய்மையான தங்கத்தை, நியாயமான விலையில் வழங்கி வருகிறது.அக் ஷய திருதியை முன்னிட்டு, இன்று முதல் 12ம் தேதி வரை, போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில், அனைத்து தங்க நகைகளுக்கும் ஒரு சவரனுக்கு 1,500 ரூபாய் தள்ளுபடி, ஒரு கேரட் வைரத்திற்கு 10,000 ரூபாய் தள்ளுபடி, பிளாட்டினத்திற்கு செய்கூலியில் 20 சதவீதம் தள்ளுபடி, வெள்ளி பொருட்கள், தங்க நாணயத்திற்கு பூஜ்யம் சதவீதம் சேதாரம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும் என, இதன் இயக்குனர் ரமேஷ் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ