உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஏ., கல்லுாரி பட்டமளிப்பு விழா

எஸ்.ஏ., கல்லுாரி பட்டமளிப்பு விழா

சென்னை:''வெற்றி பெற மூன்று முக்கிய பண்புகள் முக்கியம்,'' என, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசினார். சென்னை திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ., கலை, அறிவியல் கல்லுாரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, 350 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:இன்று பட்டம் பெறும் நீங்கள், வாழ்க்கையில் வெற்றி பெற, மூன்று முக்கிய பண்புகளை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொன்றையும் படிப்பறிவையும், பட்டறிவையும் பயன்படுத்தி, பகுத்தறிய வேண்டும். அடுத்து, தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணத்தில் விடா முயற்சி வேண்டும். அதேநேரம், நல்ல குணங்களை எந்த சூழலிலும் விடக்கூடாது. அந்தவகையில், அறிவு, விடாமுயற்சி, குணநலன் எனும் மூன்று குணங்கள்தான் வெற்றிக்கான அடிப்படை.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில், கல்லுாரி இணைச்செயலர் கோபிநாத், முதல்வர் மாலதி செல்வகுமார், தாளாளர் வெங்கடேஷ்ராஜா, இயக்குனர் சாய்சத்யவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படவிளக்கம்: எஸ்.ஏ., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன், இடமிருந்து: கல்லுாரி இயக்குனர் சாய் சத்யவதி, முதல்வர் மாலதி செல்வகுமார், இணைச் செயலர் கோபிநாத், தாளாளர் வெங்கடேஷ் ராஜா, இயக்குனர் சபரிநாத், எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி ஆலோசகர் சாலிவாகனன், அதன் முதல்வர் ராமச்சந்திரன் மற்றும் துறை தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை