உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி ஓட்டுனரை தாக்கி பணம் பறிப்பு

பள்ளி ஓட்டுனரை தாக்கி பணம் பறிப்பு

பல்லாவரம், பழவந்தாங்கல், உழைப்பாளர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர், 27. பள்ளிக்கரணையில் உள்ள தனியார் பள்ளியில், பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.உடனே பாஸ்கர், சம்பள பணம் 18,000 எடுத்துக் கொண்டு, பல்லாவரம், அம்மன் நகர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில், பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், கண்ணிமைக்கும் நேரத்தில், பாஸ்கரை தாக்கி, 18,000 ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் கூச்சலிட்டார். அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பல்லாவரம் போலீசார், மர்ம நபர்களை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், திரிசூலம், இலுப்பை தோப்பு தெருவைச் வெங்கடேசன், 23, உள்ளிட்ட மூன்று பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பல்லாவரம் போலீசார், அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை