உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.10 லட்சம் ஹவாலா பறிமுதல்

ரூ.10 லட்சம் ஹவாலா பறிமுதல்

பாரிமுனை, முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு, முத்தியால்பேட்டை, கிருஷ்ணன்கோவில் தெரு ஜங்ஷனில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, மதுபோதையில் ேஹாண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவரது வாகனத்தை சோதனை செய்ததில், பாலிதீன் கவரில், 10 லட்சம் ரூபாய் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிந்தது. விசாரணையில், ரிச்சி தெருவில் உள்ள கணினி கடையில் பணி புரியும் முகமது நிஷாம்முதீன், 22, என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை