உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாட்ஸாப் குழு அமைத்து போதை மாத்திரை விற்பனை

வாட்ஸாப் குழு அமைத்து போதை மாத்திரை விற்பனை

மாங்காடு, மாங்காடை அடுத்த கோவூர் பகுதியில் நேற்று, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய கோவூரைச் சேர்ந்த ஈனோக், 28, தாமோதரன் என்கிற அப்பு, 27, சிக்கராயபுரத்தைச் சேர்ந்த விஷ்ணு, 25, சரத்குமார், 25 ஆகியோரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இவர்கள், ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், 32, என்பவரிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து, விற்பனை செய்து வந்ததும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க வாட்ஸாப் குழு அமைத்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா, 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கண்ணகி நகர்

ஓ.எம்.ஆர்., கண்ணகி நகர், துரைப்பாக்கம், காரப்பாக்கம் பகுதிகளில், வாலிபர்களை குறிவைத்து, போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டது.கண்ணகி நகர் போலீசாரின் விசாரணையில், ஒக்கியம் துரைப்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்த கலைவாணி, 52, இவரது மகன் ஜெயகுமார், 29, இவரது மனைவி லாவண்யா, 26, மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த குட்டிமோகன், 20, ஆகியோர் என தெரிந்தது.நேற்று, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 340 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 64,000 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை