மேலும் செய்திகள்
'அதிகாரி' ஆன டிரைவர்; அடங்காத லஞ்சக் கயவர்!
13-Aug-2024
சென்னை, உலக பாலியல் தினத்தை முன்னிட்டு, வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை இணைந்து, பாலியல் கண்காட்சி, 'ஸ்டெம் செல்' சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை நேற்று நடத்தின.கண்காட்சியை, தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் துவக்கினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ், ராதாகிருஷ்ணன், நிவேதிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஸ்டெம்செல் சிகிச்சை விழிப்புணர்வு குறித்து டாக்டர் காமராஜ் எழுதிய 'ஸ்டெம்செல் எனும் அருமருந்து' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.விழாவில், தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:குழந்தையின்மை, பாலியல் பிரச்னைகளுக்கான சிகிச்சை அளிப்பதிலும், புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் அறிமுகம் செய்து, மக்களுக்கான உயர் சிகிச்சையை வழங்குவதிலும், டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் தம்பதி முன்னோடியாக உள்ளனர்.'ஸ்டெம் செல்' சிகிச்சையால் குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மற்றும் முடி கொட்டுதல் உட்பட பலவற்றுக்கு தீர்வு காண முடியும்.பொதுமக்கள் இக்கண்காட்சியில் அளிக்கப்படும் இலவச பரிசோதனை, சிகிச்சைகளையும் பெற்று பலனடைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
13-Aug-2024