உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது பயனுள்ளதாக மாற்ற முடியும்: இறையன்பு

தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது பயனுள்ளதாக மாற்ற முடியும்: இறையன்பு

சென்னை:சென்னை, தி.நகரில் உள்ள பாட்டி வீடு உணவக அரங்கில், 'பேனாக்கள் சந்திப்பு' அமைப்பின் எழுத்தாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நடந்தது.இதில், குவைத்தில் இயங்கிவரும் 'பிரண்ட் லைனர்ஸ்' அமைப்பின் இணைச் செயலர் துரைராஜை பாராட்டிய பின், முன்னாள் தலைமைச்செயலர் இறையன்பு பேசியதாவது:படைப்பாளிகள், தாங்கள் எழுதப்போவதை முன்கூட்டியே மனதில் வடித்துக்கொள்ள வேண்டும். எழுத சோர்வு வரும்போது, 'பெல் அண்டு தி பட்டர்பிளை' நுால் எழுதிய ஜீன் டாம்னிக் பாபி என்பவரை நினைத்தால் போதும்.தலைப்புக்கு ஏற்றபடி பேசுவது மேடைப் பேச்சு. பட்டிமன்றம் என்பது எதிர் பேச்சாளரின் கருத்துக்களை உள்வாங்கி, அதற்கேற்ற பதிலை மக்கள் மொழியில், பேச்சு வழக்கில் பேச வேண்டும். நல்ல தமிழில் எழுதுகிறோம்; அதையே பேசுவதற்கும் முயற்சித்தால் துாய தமிழில் பேச முடியும்.நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்றைய இளைய சமுதாயம் சீரழிவது போல் தோன்றுகிறது. இது அச்சத்தையும் தருகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது. மாறாக, அதை நல்ல விதமாக எப்படி பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை, அனைவரும் சேர்ந்து ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை