உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி, கிழக்கு பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ் என்பவரின் 10 வயது மகன். இவர், நேற்று காலை காத்தவராயன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, அந்த பகுதியில் சுற்றிச்திரிந்த தெரு நாய்கள், சிறுவனை கால் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துக் குதறின. அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர்.தொடர்ந்து, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை