மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து தொழிலாளி பலி
03-Aug-2024
திருவொற்றியூர்,:தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அறிவழகன், 46; லாரி ஓட்டுனர். மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.நேற்று முன்தினம் இரவு, மணலி - சடையங்குப்பம், பர்மா நகர் பிரதான சாலையில் உள்ள ஆயில் நிறுவனத்தில் லோடு ஏற்றுவதற்காக சென்றார். அங்கு, குடிநீர் பிடிக்க சென்றவர், திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில், மாரடைப்பால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Aug-2024