உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டு சதவீத குளறுபடி விவகாரம் தி.மு.க., மீது தமிழிசை சந்தேகம்

ஓட்டு சதவீத குளறுபடி விவகாரம் தி.மு.க., மீது தமிழிசை சந்தேகம்

திருவொற்றியூர், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில், தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :தென்சென்னையில் மக்கள் எனக்கு அன்பும், ஆதரவும் அளித்தனர். அவர்களுக்கு எம்.பி.,யாக சேவை செய்யும் வாய்ப்பை வடிவுடையம்மன் வழங்குவார் என நம்புகிறேன்.தென்சென்னையில், கவுன்சிலருக்கு போட்டியிட்டவரின் பெயர் கூட நீக்கப்பட்டுள்ளது. ஓட்டளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்கிறது. ஆனால், ஓட்டளிக்க வருவோருக்கு, ஓட்டு இல்லை என தெரிவிப்பது மிகவும் கவலையாக உள்ளது.தேர்தல் ஆணையம் விளம்பரத்தில் கவனம் செலுத்துவது போலவே, இன்னும் அதிக கவனம் செலுத்தி, வீடு வீடாக சென்று ஒருவரின் ஓட்டு கூட விடுபடாமல் இருக்க வேண்டுமென கேட்டு;க கொள்கிறேன்.தமிழகத்தில் எந்த பிரச்னை கிடைத்தாலும் குரல் கொடுக்கும் திராவிட கட்சிகள், தேர்தல் ஓட்டுசதவீத குளறுபடி குறித்து குரல் கொடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மோடி, காங்கிரசின் தேர்தல் அறிக்கை இடம் பெற்றிருந்த கருத்திற்கு எதிர் கருத்து தெரிவித்தரே தவிர, முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து அல்ல.முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் செல்வதற்கு உரிமையை வாங்கி கொடுத்தார். முத்தலாக் போன்ற சட்டங்களில் இருந்து பெண்களை பாதுகாத்தார்.சிறுபான்மையினரை ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், முஸ்லிம்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை தான் தான் கொடுப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ