உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக்கில் தவறி விழுந்த மெக்கானிக் பலி

பைக்கில் தவறி விழுந்த மெக்கானிக் பலி

அரும்பாக்கம், அரும்பாக்கம், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் தீபக், 27; மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு, 'யமஹா' பைக்கில், அரும்பாக்கம் வழியாக வேகமாக சென்றார். அப்போது, ரசா கார்டன் அருகில் பைக் கட்டுப்பாட்டை இழந்து, தீபக் சாலையின் நடுவே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சையில் இருந்த தீபக், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை