உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாடகை வீட்டை லீசுக்கு விட்டவர் கைது

வாடகை வீட்டை லீசுக்கு விட்டவர் கைது

ஆவடி, சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரம், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராம் பிரசாத், 48. இவர், கடந்த மார்ச் 25ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:சென்னை, மதனந்தபுரம், ராஜேஸ்வரி நகரில் உள்ள தனியார் குடியிருப்பின் பொறுப்பாளராக உள்ளேன். மேற்கண்ட வீட்டை வாடகைக்கு விட, 'ரியல்ட்டி மாங்க்' என்ற நிறுவனத்தின் மேலாளர் ஹரிஷ் குமார், கடந்த 2018 ல், மூன்று ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார்.பின், அந்த வீட்டை, 2019 முதல்'ரியல்ட்டி மாங்க்' நிறுவனம் வாயிலாக அக்ஷிகா என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் பெற்று ஹரிஷ் குமார் லீசுக்கு விட்டுள்ளார். இதனால், மாத வாடகை 23,400 பணத்தை கொடுக்காமல் ஹரிஷ் குமார் ஏமாற்றி வருகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.இதன்மீது, வழக்குப்பதிவு செய்த மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி, தலைமறைவாக இருந்த சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஹரிஷ் குமார், 38 என்பவரை நேற்று காலை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K Lakshmi
மே 12, 2024 01:41

Hi, Grateful to Commissioner and his team for their relentless efforts in apprehending the fraudster This individual and his team Harish Kumar is a Tamil Actor of Migamiga Avasaram, Kadhal has been deceiving property owners since They enter into lease agreements with owners, promising rent for the next three years However, after receiving a payment of $ Lakhs or more from tenants, they fail to pay rent to the owner after just two months The tenant, brought in by this individual, remains in the property and instead of going after the person for getting the lease money back, demands $ Lakhs from the owner to vacate the premises Legal proceedings for eviction stall in court for over years, leaving owners with no choice but to pay the lease money to compel the tenant to leave and safeguard the property As NRIs, we were shocked to learn about a lease type in Tamil Nadu where the tenant provides $ Lakhs to the rental company and resides in the property for free until the deposit is refunded Had we known about this, why would we have invested our hard-earned money in buying a home when we could have stayed for free in a house until the deposit was returned? Until our justice tem is reformed, such fraud will continue unabated It appears that Over + property owners and tenants have been cheated on the promise of property management and leasing agreements


மேலும் செய்திகள்







புதிய வீடியோ