உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஐ.,யை வெட்ட முயன்ற ரவுடி கைது

எஸ்.ஐ.,யை வெட்ட முயன்ற ரவுடி கைது

கடம்பத்துார், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வெங்கத்துார் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் மணவாளநகர் எஸ்.ஐ., கர்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்பகுதியை கடந்த வெங்கத்துார் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவுடி அன்பரசன் என்ற அன்பு, 28, என்பவரை போலீசார் விசாரிக்க முயன்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ., கர்ணனரை வெட்ட முயன்றார், ரவுடி அன்பு. இதில் தப்பிய எஸ்.ஐ., போலீசார் உதவியுடன், ரவுடியை மடக்கி பிடித்தார். விசாரணையில் ரவுடி அன்பு மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரிந்தது. அவரை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி