உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு பூட்டை உடைத்து 16 சவரன் திருட்டு

வீடு பூட்டை உடைத்து 16 சவரன் திருட்டு

மதுரவாயல், மதுரவாயலில், வீட்டின் பூட்டை உடைத்து, 16 சவரன் நகை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரவாயல், ஆலப்பாக்கம் ராஜிவ்காந்தி நகர், மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் குமரன், 44; கார் ஓட்டுனர். இவரது மனைவி கார்த்திகா, 40, அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு, வேலைக்குச் சென்றனர். இந்நிலையில், குமரன் மதியம் வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 16 சவரன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 6,000 ரூபாய் ஆகியவை திருடு போனது தெரிந்தது. மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை