உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிலிண்டர்கள் திருட்டு

சிலிண்டர்கள் திருட்டு

பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், செந்துார்புரம் விரிவு- 1ல், குடியிருப்புகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யும் பணியில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், பாலு ஆகிய இருவர் ஈடுபட்டு வருகின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன், இங்கு இறக்கி வைக்கப்பட்ட சிலிண்டர்களில், இரண்டு திடீரென மாயமாகியுள்ளது.இதையடுத்து, குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சர்வ சாதாரணமாக இரண்டு சிலிண்டர்களை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.புகாரின்படி, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி