உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமலர் பட்டம் வினாடி -- வினா முதல் நாள் போட்டி கோலாகலம்

தினமலர் பட்டம் வினாடி -- வினா முதல் நாள் போட்டி கோலாகலம்

தாம்பரம், 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' சார்பில், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பட்டம் வினாடி - வினா போட்டி, ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.கடந்தாண்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா'விற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இந்தாண்டு , 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை இணைந்து, பட்டம் வினாடி - வினா போட்டியை நடத்துகின்றன.பள்ளிகளுக்கு இடையேயான முதல் போட்டி, தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று துவங்கின.இதில், 970 மாணவர்கள் முதற்கட்ட தேர்வு எழுதினர். அதிலிருந்து, அதிக மதிப்பெண்கள் எடுத்த 16 மாணவர்கள், அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களை ஒரு அணிக்கு இரு மாணவர்கள் வீதம், எட்டு அணிகளாக பிரித்து, மூன்று சுற்றுகள் போட்டி நடத்தப்பட்டன.இதில், 9ம் வகுப்பு மாணவர் ஜிஷ்ணுவரதன் - 8ம் வகுப்பு மாணவர் கோகுல் ஆகியோர் வெற்றிப் பெற்று, இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர்.கேள்விகள் அனைத்தும், மாணவர் பட்டம் பதிப்பில் வெளியான செய்திகளில் இருந்து கேட்கப்பட்டன.முதற்கட்ட தேர்வில் பங்கேற்ற, 970 மாணவ - மாணவியருக்கும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன தொடர்ந்து 16 மாணவர்களுக்கு பதக்கங்களும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டன.இதேபோல், 200 பள்ளிகளில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு அணி, இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளது.வரும் 2025, ஜனவரியில் இறுதி போட்டி நடக்கும். இதில் வெற்றி பெறும் மாணவர்கள், 'இஸ்ரோ'வுக்கு அழைத்து செல்லப்பட உள்ளதோடு, அவர்களுக்கு மெகா பரிசும் காத்திருக்கிறது.இந்த நிகழ்ச்சியில், பட்டம் பதிப்பு பொறுப்பாசிரியர் வெங்கடேஷ், 'தினமலர்' துணை பொது மேலாளர் சேகர். ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை முதல்வர் காயத்ரி ராமசந்திரன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மின்னியல் துறை தலைவர் சங்கர் மற்றும் பட்டம் பதிப்பு குழுவினர் பங்கேற்றனர்.எளிதாக கற்க முடிகிறதுபள்ளியில், தினசரி 'பட்டம்' பதிப்பு படிப்போம். இதற்கு, பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் உதவி செய்கின்றனர். பட்டம் பதிப்பை படிப்பதால், நிறைய விஷயங்களை எளிதாக கற்க முடிகிறது. அறிவியல் கேள்விகள், தேர்வுக்கு உதவியாக இருக்கின்றன. நண்பர்களுடன் சேர்ந்து, கேள்வி - பதிலை படிப்போம். வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.- ஜிஷ்ணுவரதன் - கோகுல், வெற்றி பெற்ற மாணவர்கள்மகிழ்ச்சிமாணவர்களை, சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே, 'பட்டம்' பதிப்பின் நோக்கம். இதன் ஒரு முயற்சி தான், இந்த வினாடி - வினா போட்டி. பட்டம் பதிப்பில் நீங்கள் என்ன படித்தீர்கள் என்பதை, இதன் வாயிலாக தெரிந்துகொள்ளப் போகிறோம். முதற்கட்ட தேர்வில் 970 மாணவர்கள் பங்கேற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது. - வெங்கடேஷ், பொறுப்பாசிரியர், 'பட்டம்' பதிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை