உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதுகு தண்டுவட வளைவு இளம்பெண்ணுக்கு சிகிச்சை

முதுகு தண்டுவட வளைவு இளம்பெண்ணுக்கு சிகிச்சை

சென்னை, முதுகு தண்டுவட வளைவால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை குறித்து, காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:முதுகு தண்டுவட வளைவு என்ற 'ஸ்கோலியோசிஸ்' என்பது, மரபணு சார்ந்த பாதிப்பு. முதுகு தண்டுவடம் இயல்பாக இல்லாமல், எஸ் அல்லது சி வடிவில் வளைந்திருந்தால் அதனை, 'ஸ்கோலியோசிஸ்' என அழைக்கிறோம். அதன் காரணமாக, தோள்பட்டை, இடுப்பு நேராக இல்லாமல், தோற்ற உருக்குலைவு ஏற்படுகிறது. ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு பாதிப்பு அதிகம் உள்ளது. அப்பிரச்னை தீவிரமடையும்போது, நுரையீரலில் அழுத்தம் ஏற்பட்டு, சுவாசிக்க இயலாத நிலை உருவாகும். அதுபோன்ற பாதிப்புடன், இலங்கையை சேர்ந்த 22 வயது இளம்பெண், வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, முதுகு தண்டுவடம் 130 டிகிரி அளவுக்கு வளைந்திருந்தது. அதை சீரமைக்க, மருத்துவமனையின் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் திலீப் சந்த் ராஜா தலைமையிலான குழுவினர், ஒன்பது மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பயனாக, அப்பெண்ணின் இயல்பு வாழ்க்கை மீட்டெடுக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை