மேலும் செய்திகள்
தனியார் நிறுவன கேபிள் நடைபாதையில் குவிப்பு
28-Aug-2024
சென்னை:சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையின் 11 இடங்களில், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க, சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவை, காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மட்டுமே உபயோகத்திற்காக திறந்து வைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சுரங்க நடைபாதையை, அதற்காக நியமிக்கப்பட்ட காவலாளி மூடி செல்வதாக புகார் எழுந்து உள்ளது.ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இரு சுரங்க நடைபாதைகளும் இரவு 9:30 மணிக்குள் மூடப்படுகின்றன. இதனால் பாதசாரிகள், போக்குவரத்து நிறைந்த அண்ணா சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்; விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சுரங்க நடைபாதையை திறந்து வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
28-Aug-2024