பெயின்டரை தாக்கிய இரண்டு பேர் கைது
கண்ணகி நகர், மே 6-– முன்விரோதத்தில் பெயின்டரை தாக்கிய இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர். ஒக்கியம்துரைப்பாக்கம், எழில் நகரை சேர்ந்தவர் துரைராஜ், 29. பெயின்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணன், சூர்யா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம், வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த துரைராஜை, அங்கு வந்த நான்கு பேர் சேர்ந்து, கம்பியால் தலையில் தாக்கினர். தடுக்க முயன்ற அவரது பெற்றோரையும் தாக்கினர். காயமடைந்த மூன்று பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணகி நகர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட, சாம், 18, சஞ்சய், 19, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவான இரண்டு பேரை தேடுகின்றனர்.