பெண்ணிடம் அத்துமீறல் கோயம்பேடில் இருவர் கைது
சென்னை, கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண், நேற்று முன்தினம் கோயம்பேடு தெற்கு மாடவீதியில் நடந்து சென்றார்.அப்போது, இரண்டு மர்மநபர்கள் அவரது கையைப் பிடித்து இழுத்து ஆபாசமாக பேசியதுடன், தகாத முறையில் ஈடுபட முயன்றனர். அப்பெண் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால், மர்மநபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி முத்துக்குமார், 45, ரமேஷ், 52, ஆகியோர் பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.