உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

போரூர், சென்னை, மவுன்ட் - -பூந்தமல்லி சாலை போரூரில், சேது ே ஷத்திரத்தில், சர்வசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், அதனுள் உள்ள மற்ற சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 20ம் தேதி மங்கள இசை, தேவதா அனுக்ஞை பிரசன்ன விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், கோ பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்கியது.தொடர்ந்து, நான்குகால யாக பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை 8:00 மணியளவில், சிவாச்சாரியர்கள் முன்னிலையில் அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.மூலவர், பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ