உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 மாதங்களில் 2,255 கண்கள் தானம் பெற்றுள்ளோம்

8 மாதங்களில் 2,255 கண்கள் தானம் பெற்றுள்ளோம்

சென்னை:மத்திய அரசால் கடந்த இரு வாரங்கள் தேசிய கண் தான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி நேற்று, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் பிரிவான இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி சார்பில், நேற்று, எலியட்ஸ் கடற்கரையில், டாக்டர்கள், மாணவர்கள் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. நிகழ்வை டி.ஐ.ஜி., பகலவன் துவக்கி வைத்தார். இது குறித்து, மருத்துவமனையின் பிராந்திய தலைவர் சவுந்தரி கூறியதாவது:நம் நாட்டில், பார்வையற்றோரில் பெரும்பாலானோருக்கு கருவிழி குருட்டுத்தன்மை உள்ளது. கண்தானம் பெறும் விழியிலிருந்து, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து, இதை சரி செய்யலாம். கடந்த எட்டு மாதங்களில், 2,255 கண்களை, தானமாக பெற்றுள்ளோம். இளம் வயதினருக்கு முன்னுரிமை அளிக்கிறோம். மேலும் விபரங்களுக்கு 94444 44844 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ