உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது குடிக்க மறுத்த நண்பர்களை வெட்டிய 4 பேருக்கு வலை

மது குடிக்க மறுத்த நண்பர்களை வெட்டிய 4 பேருக்கு வலை

குன்றத்துார்:குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வம், 24; ஆட்டோ ஓட்டுனர். இவரது நண்பர் பூந்தண்டலத்தைச் சேர்ந்த விஜய், 24; பெயின்டர். இருவரும் நேற்று, நந்தம்பாக்கம், ராஜிவ்காந்தி தெருவில் பைக்கில் சென்றனர்.அப்போது, மது அருந்திக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ஜெகன், 23, ஜெகதீஷ், 22, சாகுல், 23, மகேஷ், 24, ஆகியோர், இருவரையும் வழிமறித்து மது குடிக்க வற்புறுத்தி உள்ளனர். அதற்கு, 'நாங்கள் ஏற்கனவே போதையில் உள்ளதால் மீண்டும் மது குடிக்க வரவில்லை' எனக் கூறியுள்ளனர்.இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் சேர்ந்து விஜய், செல்வம் தலையில் பீர் பாட்டிலால் அடித்தும், கத்தியால் வெட்டியும் தப்பினர்.பலத்த காயமடைந்த விஜய் மற்றும் செல்வம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஜெகன் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை