மேலும் செய்திகள்
பூந்தமல்லியில் முளைத்துள்ள மெகா பேனர்கள்
10-Aug-2024
பூந்தமல்லி, ஆபூந்தமல்லியில் அதிகரித்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகளால், பகுதிவாசிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.பூந்தமல்லி நகராட்சியில், 80,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நகராட்சியில் பூந்தமல்லி பேருந்து பணிமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, பாரிவாக்கம் சாலை என, பூந்தமல்லியைச் சுற்றி, 3 கி.மீ., சுற்றளவில், 10 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன.இந்த டாஸ்மாக் கடைகள், நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், இந்த கடைகளில் கள்ளச் சந்தையில், 24 மணி நேரம் மது விற்பனை செய்யப்படுவதால், குடிமகன்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவர்கள், சாலையில் நடந்து செல்லும் பெண்களை கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதால், அப்பகுதி வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவியரும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக, பூந்தமல்லி நகரத்திற்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
10-Aug-2024