உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் கோரி பெண்கள் மறியல்

குடிநீர் கோரி பெண்கள் மறியல்

திருவொற்றியூர், திருவொற்றியூர் மேற்கு, ஏழாவது வார்டில், அண்ணா நகர், அண்ணாமலை நகர் உட்பட, 20 க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்கு, 20,000 க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியினருக்க, குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், 15 நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள், கே.சி.பி., சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, சாத்தாங்காடு போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், மறியலில் ஈடு பட்டவர்களிடம் சமாதானம் பேசி கலைத்தனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ