மகளிர் அணி ஹாக்கியில் சாம்பியன்
சென்னை, 'கேலோ இந்தியா' மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, 'அஸ்மிதா' என்ற தலைப்பில், மகளிர் சப் - ஜூனியருக்கான மாநில ஹாக்கி 'லீக்' போட்டியை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடத்தின.நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில், திருவண்ணாமலை வீராங்கனை அகஸ்தியா, கவுசிகா, ஸ்வாதி ஆகியோர், தலா ஒரு கோல் அடித்தனர். 3 - 0 என்ற கணக்கில், புதுக்கோட்டை அணியைத் தோற்கடித்து, திருவண்ணாமலை அணி சாம்பியன் கோப்பையை வென்றது.மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், ஈரோடு அணி, 2 - 1 என்ற கணக்கில், வேலுாரை தோற்கடித்தது.