உலக கடல்சார் வரலாறு சென்னையில் கருத்தரங்கு
சென்னை, 'விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா சார்பில், ஆர்.எஸ்.என்., நினைவு நுாலகம் மற்றும் இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, 'உலக கடல்சார் வரலாறு' குறித்த சிறப்புரை, தி.நகரில் நேற்று நடந்தது.ஆர்.எஸ்.என்., நினைவு நுாலகம் மற்றும் இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வேதாந்தம் பங்கேற்றார். பேராசிரியர், கடல்சார் துறை நிபுணர் கே.ஆர்.ஏ.நரசய்யா அனுப்பிய ஆய்வு அறிக்கையை, இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ராமாகிருஷ்ணா ராவ் வாசித்தார்.அதில் கூறியிருப்பதாவது:கப்பல் தொழில் மற்றும் கடற்படையில் சோழர்கள் சிறந்து விளங்கியதற்கு பல்வேறு ஆதாரங்கள், தமிழகத்தில் உள்ளன.விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் கிடைத்துள்ளன. இதேபோல், இலக்கிய சான்றாக, பல நுால்கள் உள்ளன. அவர்களின் காலத்தில் கப்பல் உருவாக்கும் முறைகள், தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள், கருவிகள் குறித்து தெளிவாகவும், ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளன. இதில், கப்பல் சாஸ்திரம் என்ற நுால், முக்கியமானதாக இருக்கிறது.நாகப்பட்டினம், கடலுார், சென்னை உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களும் 18ம் நுாற்றாண்டு வரை முக்கியமானதாக இருந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் சரவணன், இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் பொன்கி பெருமாள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.