உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபர் சிக்கினார்

பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபர் சிக்கினார்

நந்தம்பாக்கம், மணப்பாக்கம், முருகானந்தம் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி காமாட்சி, 44; பூ வியாபாரி. கிரிகோரி நகர் பிரதான சாலையில் பூக்கடை நடத்தி வருகிறார்.கடந்த மாதம், 11ம் தேதி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்து போது, பைக்கில் வந்த நபர், பூ வங்குவது போல நடித்து, திடீரென காமாட்சி அணிந்திருந்த செயினை பறித்து தப்ப முயன்றார்.காமாட்சி செயினை இறுகப்பிடித்துக் கொள்ளவே, அது மூன்று துண்டானது. 5.5 கிராம் எடையுள்ள செயின் துண்டுடன், அந்த நபர் தப்பினார். இது குறித்த புகாரின்படி, நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், செயின் பறித்தது எம்.ஜி.ஆர்., நகர், கோவிந்தசாமி தெருவை சேர்ந்த அபிஷேக், 21, என்பது தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், செயினை மீட்டனர். மேலும், வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை