கிரீம்ஸ் சாலையில் 10 அடி ஆழ பள்ளம்
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், தனியார் மருத்துவமனை உள்ள கிரீம்ஸ் சாலையில், திடீரென, 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, கிரீம்ஸ் சாலையில், தனியார் மருத்துவமனை மற்றும் காவலர் குடியிருப்பு, வணிக வளாகங்கள் உள்ளன.இச்சாலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, திடீரென, 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், பள்ளத்தைச் சுற்றி, இரும்பு தடுப்புகள் அமைத்து, போக்குவரத்தை சீர் செய்தனர்.