உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 கிலோ கஞ்சா பறிமுதல்

10 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பூர்,ரயில் மூலம் வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, வடக்கு மண்டல காவல் துறையின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், நேற்று மதியம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை பெரம்பூர் வந்த ரயிலில், 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ராஜு, 60, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.மாற்றுத்திறனாளியான அவரிடம் விசாரித்ததில், ஒடிசாவில் தெரிந்த நபரிடம் ஒரு கிலோ கஞ்சாவை 5,000 ரூபாய்க்கு வாங்கி வந்து, அறிமுகமான நபர்களுக்கு ஒரு கிலோ 10,000 ரூபாய்க்கு விற்று வந்தது தெரியவந்தது. போலீசார் ராஜுவை கைது செய்து, ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை