டீக்கடையில் 10 கிலோ குட்கா பறிமுதல்
படப்பை, வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அருகே செரப்பணஞ்சேரியில் ஹைதராபாத் ராணி என்ற பெயரில் முகமது இம்ரான், 38, என்பவர், டீ கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மணிமங்கலம் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், கடையில் பதுக்கி விற்கப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட 10 கிலோ குட்கா புகையிலை கண்டறியப்பட்டது. இதையடுத்து, முகமது இம்ரானை மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர். உணவு பாதுகாப்பு துறையினர், அந்த கடையை பூட்டி 'சீல்' வைத்தனர்.