அரக்கோணம் தடத்தில் 10 ரயில் சேவை மாற்றம்
சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - அரக்கோணம் தடத்தில், 10 மின்சார ரயில்களின் சேவையில், இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருத்தணி - கடற்கரை காலை, 8:50 மணி; திருவள்ளூர் - கடற்கரை காலை, 11:00 மணி; ஆவடி - கடற்கரை நண்பகல், 12:10 மணி ரயில்கள், வியாசர்பாடி ஜீவா வரை மட்டுமே செல்லும்கடற்கரை - ஆவடி காலை, 11:05 மணி; கடற்கரை - திருத்தணி நண்பகல் 12:10 மணி; கடற்கரை - திருவள்ளூர் மதியம், 1:05 மணி ரயில்கள், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி - கடற்கரை காலை, 8:50, காலை 10:55 மணி ரயில்கள் கொருக்குப்பேட்டை வரை மட்டுமே செல்லும்கடற்கரை - கும்மிடிப்பூண்டி நண்பகல், 12:40 மணி ரயில் கொருக்குப்பேட்டையில் இருந்து இயக்கப்படும் செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி காலை, 10:00 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.