உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உள்நாட்டு ரோபோடிக் மூலம் 100 பேருக்கு அறுவை சிகிச்சை

உள்நாட்டு ரோபோடிக் மூலம் 100 பேருக்கு அறுவை சிகிச்சை

சென்னை,சென்னை பிரசாந்த் மருத்துவமனையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ரோபோடிக்' சாதன உதவியுடன், 100 பேருக்கு வயிறு சார்ந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து, மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் பிரசாந்த் கிருஷ்ணா கூறியதாவது: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'ரோபோடிக்' உதவியுடன், பித்தப்பை அகற்றம், கர்ப்பப்பை அகற்றம், குடலிறக்க அறுவை சிகிச்சை, பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை உள்ளிட்ட வயிறு சார்ந்த, 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 'ரோபோடிக்' அறுவை சிகிச்சை நிபுணர் பாரிமுத்துக்குமார் தலைமையில் மிக துல்லியமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மிக நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை கொண்ட, 'ரோபோடிக்' பயன்படுத்துவதால், சிகிச்சை செலவும் குறைகிறது. 100 அறுவை சிகிச்சை செய்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதேபோல், 'டெலிசர்ஜரி' என்ற தொலைதுார அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை