உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீரிழிவு நோய் விழிப்புணர்வு 1,000 மாணவர்கள் யோகாசனம்

நீரிழிவு நோய் விழிப்புணர்வு 1,000 மாணவர்கள் யோகாசனம்

சென்னை, எம்.வி.நீரிழிவு நோய் மருத்துவமனை சார்பில், நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 1,000 மாணவர்கள் பங்கேற்ற யோகாசனம் நிகழ்ச்சி நடந்தது.உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, சென்னை எம்.வி.நீரிழிவு நோய் மருத்துவமனை சார்பில், 11 முதல் 17 வயதுக்கு உட்பட்ட, 1,000 மாணவர்கள் பங்கேற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது.இதில், மருத்துவமனை தலைவர் விஜய் விஸ்வநாதன் கூறியதாவது:ஆசிய சாதனை புத்தகத்தின் அதிகாரி விவேக் நாயர், இந்த சாதனையை சரிபார்த்து உறுதி செய்வதற்காக வந்தார்.ஆசியா முழுதும், பல்வேறு சாதனைகளை, இக்குழுமம் நிகழ்த்தியுள்ளது. 40,000 சாதனைகள் நிகழ்த்தியுள்ள நிலையில், இவை கூட்டு முயற்சி என்ற பிரிவில் நிகழ்த்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இதில், இந்திய யோகா சங்கத்தின் உறுப்பினர் இளங்கோவன், டாக்டர்கள் வசந்தா கவுரி, சிவசக்தி பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை