உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அனுமன் ஜெயந்தி விழா 10,000 பேர் பங்கேற்பு

அனுமன் ஜெயந்தி விழா 10,000 பேர் பங்கேற்பு

சென்னை, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் கங்கையம்மன் கோவிலில், 32ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மற்றும் 9ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா, நேற்று முன்தினம் நடந்தது.அய்யப்ப சுவாமிக்கு, 108 சங்காபிஷேகம், ஆஞ்சநேயருக்கு பழ வகைகளால் அலங்காரம், 10,008 வடமாலை சார்த்துதல், மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன.இரவு, கோவிலில் இருந்து பெண்கள், குழந்தைகள் என, 1,000 பேர் திருவிளக்கு ஏந்தி, பஜனை பாடல் பாடி மாடவீதி வழியாக விழா பந்தலை சென்றடைந்தனர். தொடர்ந்து, மஹா தீபாராதனை மற்றும் 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், கங்கையம்மன் கோவில் அறங்காவலரும், 198வது வார்டு கவுன்சிலரும், பா.ஜ.,வின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவருமான லியோ என்.சுந்தரம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ