மேலும் செய்திகள்
பைக்கில் கஞ்சா கடத்தல் நான்கு பேர் கைது
28-Feb-2025
பல்லாவரம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை, அனகாபுத்துார் பாலத்தின் மீது, சங்கர் நகர் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கர்நாடகா பதிவு எண் உடைய சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டதில், 103 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த மதுரையைச் சேர்ந்த டேனியல் ராஜா, 34, பரமன், 45, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி, தமிழகம் முழுதும் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
28-Feb-2025