1,091 வில்லா வீட்டு மனைகள் ஜி ஸ்கொயர் நிறுவனம் திட்டம்
சென்னை, வடசென்னை பகுதிகளில், 230 கோடி ரூபாயில், 1,091 வில்லா வீட்டு மனைகளை அறிமுகம் செய்ய, 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.வடசென்னை தற்போது வீட்டு மனை துறையில் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வீட்டுமனை, வணிக மேம்பாட்டு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜி ஸ்கொயர், செங்குன்றம், புழல், காரனோடை உள்ளிட்ட பகுதிகளில் வீடு கட்டி குடியேறும் வகையில், 1,091 வில்லா மனைகளை, 62.38 ஏக்கரில் உருவாக்கப்படுகிறது.இதுகுறித்து, 'ஜி ஸ்கொயர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலராமஜெயம் கூறியதாவது: வடசென்னை தற்போது வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உள்கட்டமைப்பு, சிறப்பு போக்குவரத்து வசதி என பல்வேறு துறைகளிலும், வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.குறிப்பாக, ஐ.டி., நிறுவனங்கள், தொழில்துறை மண்டலங்கள், குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன. ரெட் ஹில்ஸ், புழல் உள்ளிட்ட பகுதிகளில், 'டவுன்ஷிப்'கள் கட்ட தயாராக உள்ள மனைகள், அடிப்படை வசதிகளுடன் கொண்டு உருவாக்கப்படுகிறது. இங்கு இடம் வாங்குபவர்களுக்கு ஓராண்டு இலவச பராமரிப்பும் செய்து தரப்படும். நகரின்ஒவ்வொரு வளர்ச்சிப் பகுதியிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட வீட்டு மனைகளை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். வடசென்னை போன்ற வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளை கண்டறிந்து, வீட்டு மனைகளை சரியான விலையில் சரியான நேரத்தில் சொந்தமாக்கி கொள்ள உதவுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.