மேலும் செய்திகள்
சொத்தை வாங்கிக்கொண்டு தந்தையை விரட்டிய மகன்
14-Aug-2025
மணலிபுதுநகர், தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 24 கோடி ரூபாய் மதிப்பிலான 10.95 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள், சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ளன. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் - 2, வேப்பங்கொண்டா ரெட்டி பாளையம் கிராமத்தில், தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சொந்தமான, சர்வே எண், 213ல், 6.32 ஏக்கர்; சர்வே எண், 214ல், 4.63 ஏக்கர் நிலம் என, 10.95 ஏக்கர் நிலமும், ராமநாத ரெட்டியார், கிருஷ்ணன், தசரதன் ஆகிய மூவரும், 2004ல், குத்தகை காலம் முடிந்தும், நிலத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை. மேலும், கோவில் நிர்வாகம், உரிமை கோராமல் இருக்கவும், சொத்தை அனுபவிப்பதற்கு எந்த இடையூறு ஏற்படாமல் இருக்கவும், 2009 ம் ஆண்டும், பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், ஆக்கிரமிப்புதாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில், 2019ம் ஆண்டு, 10.95 ஏக்கர் நிலம், கோவிலுக்கு சாதகமான தீர்ப்பானது. அதன்படி, 20 ஆண்டாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை, கோவில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையில், ஆய்வாளர் அறிவு செல்வி, தனி வட்டாட்சியர் சத்யேந்திர ராஜ், கோவில் பணியாளர்கள் சந்தானம், சுபா தேவி மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மீட்கப்பட்டு, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட, 10.95 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு, 24 கோடி ரூபாயாகும்.
14-Aug-2025